மரணமடைந்த பிரித்தானிய ரக்பி வீரர்களை ஏற்றி வந்த ஓட்டோ சாரதி யார்?

மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்த பிரித்தானிய ரக்பி குழுவைச் சேர்ந்த வீரர்கள் இருவரை, கொழும்பிலுள்ள இரவு விடுதியொன்றுக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படும், ஓட்டோவொன்றின் சாரதியை தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.  
மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
மரணம​டைந்த, அந்த வீரர்கள் இருவரின் சடலங்களும், பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், அவர்களின் உறவினர்களிடம் கடந்த 18ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டன. 
இந்த வீரர்கள் இருவரும், இரவு விடுதிக்குள் சென்று, தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு திரும்பும் வரையிலும் இடம்பெற்றவை தொடர்பில், இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்றும் அவை மர்மமாகவே உள்ளதெனவும் அறியமுடிந்துள்ளது.  
நட்புறவு ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக, பிரித்தானிய ரக்பி குழு, கடந்த 10 ஆம் திகதியன்று வருகைதந்திருந்தது. கடந்த 12 ஆம் திகதியன்று, போட்டியில் பங்கேற்றிருந்தது. அந்த குழுவைச் சேர்ந்த வீரர்கள் இருவர், கொள்ளுப்பிட்டியவில் உள்ள இரவு விடுதிக்கு, அன்று நள்ளிரவு 12.03க்கு வருகைதந்துள்ளனர். அவர்கள், அதிகாலை 1.23 மணிக்கு, விடுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.  
அவ்விருவரும், ஓட்டோ சாரதியொருவருடனேயே விடுதிக்குள் சென்று, அவருடனேயே, வெளியேறியுள்ளனர். இவை தொடர்பிலான காட்சிகள், அந்த விடுதியில் பொறுத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கமெராவில் பதியப்பட்டுள்ளது. 
என்றாலும், அவ்விருவரும் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு அன்று காலை 4 மணிக்கே வருகைதந்துள்ளனர்.  
எனினும், அன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, அவ்விருவம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதிலொருவர் அன்று நண்பகல் 12 மணிக்கு மரணமடைந்துவிட்டார். மற்றைய வீரர், 15 ஆம் திகதி மாலை மரணமடைந்துவிட்டார்.  
ஆகக் கூடுதலான போதைப்பொருள் பாவனையின் காரணமாகவே, அவ்விருவரின் மரணங்களும் சம்பவத்திருக்கலாம் என, சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், அவ்விருவரும் இரவு விடுதியிலிருந்து வெளியேறி, தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு வரும் வரையிலும் இடம்பெற்றவை, மர்மமாகவே இருக்கின்றது என்று தெரிவித்த பொலிஸார், ஓட்டோ சாரதியை தேடி வலைவிரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த பாவட் தோமஸ் அன்றா (வயது 26) என்ற வீரர், 13ஆம் திகதியும், பெட் தோமஸ் ரிட் (வயது 27) என்ற வீரர், 15 ஆம் திகதியும் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
பிரித்தானிய கழக மட்ட அணி, கடந்த 10ஆம் திகதியன்று இலங்கை வருகைதந்தது. அதில், 22 வீரர்கள் உள்ளடங்கியிருந்தனர். அந்த அணியினர், கொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள சுற்றுலா​ ஹொட்டலொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.