யாழில் மரங்கள் நட- இராணுவத்துக்கு அனுமதியில்லை!

யாழ்.நகரைப் பசுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்
எதிர்வரும் ஜுன் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள மரநடுகைத் திட்டத்தில், இராணுவத்தினரை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று நடைபெற்றது. அதில் சபை உறுப்பினர் வி.மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
Powered by Blogger.