ரணில் அதிதிறமையான அரசியல்வாதியா?!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை போன்று அதிதிறமையான அரசியல்வாதி ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை என்று, மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் அவர் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதி புத்திக்கூர்மை உடைய, மிகவும் திறமையான ஒரு அரசியல்வாதி என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 நீண்டகாலமாக அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்து பல்வேறு சவால்களை வெற்றிக் கொண்டுள்ளார்.

 ஆனால், அவரது திறமை நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும், நாட்டுக்கு பாதகமான செயற்பாடுகளுக்குமே பயன்பட்டுள்ளது என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.