வெள்ள நீர் வடிந்ததன் பின்னர் அபிவிருத்தி!

வெள்ள நீர் வடிந்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நிதியை வழங்குவதற்குரிய மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
 
வீதிகள், பாலங்கள் என்பன தொடர்பான சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களுக்காக 500 ரூபா தொலைபேசி கட்டணம் வழங்கப்பட இருக்கிறது.
 
வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புள்ளாகும், களனி பிரசேதத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கான நிலையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட இருக்கிறது. அனர்த்தங்களுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்;கவென மேலதிக நிதியையும் ஒதுக்க அரசாங்கம் தயார் என்ற அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
 
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக வீடுகள்; 25 இலட்சம் ரூபா வரையிலான பெறுமதிக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. சேத மதிப்பீடு இன்றி இந்த பெறுமதியை வழங்க முடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டினார். மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியடையும் வரை பத்தாயிரம் ரூபாவை விட கூடுதலான பெறுமதியுடைய சேதங்களுக்காக முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்பட இருக்கிறது. அனர்த்தங்களுக்கு உள்ளான 20 மாவட்டங்களுக்காக நான்கு கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.