மன்னாரில் மாதா சொரூபம் உடைக்கப்பட்டது!

மன்னாரில் புனித மரியன்னையின் சொரூபம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் அமைந்திருந்த புனித மரியாள் சொரூபமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

மன்னார் – சௌத்பார் கடற்கரை பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த புனித மரியன்னை சொரூபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.Powered by Blogger.