காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது !

கடமைகளை நிறைவேற்றும் போது, காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது என்று, பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோருக்கான பணியகம், மாத்தறையில் நேற்று காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.
இதன்போது கருத்து வெளியிட்ட சாலிய பீரிஸ், “எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல், எமது பணிகளை நாங்கள் ஆற்றுவோம்.
1970 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் காணாமல் போனவர்கள் பற்றிய முறையான எந்தவொரு தரவுகளும் இல்லை.
காணாமல் போனோருக்கான பணியகம், விரிவானதொரு பட்டியலைத் தயார் செய்யும்.
நாடெங்கும், 12 பிராந்திய பணியகங்களையும், காணாமல் போனோருக்கான பணியகம் நிறுவவுள்ளது.
விசாரணை, கண்டுபிடித்தல், சாட்சிகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கான புதிய அலகுகளும் நிறுவப்படும்.
காணாமல் போனோருக்கான பணியகம் வடக்குக்கு மாத்திரமானது அல்ல.
போரின் போது காணாமல் போன 5100 படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட தெற்கில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரிக்கும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.