ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகினார்!

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன அறிவித்துள்ளார்.

இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சியின் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பனவற்றின் தலைவர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.