கொடவத்தையில் கொள்கலனில் போதை பொருட்களுடன் மூவர் கைது!

ஒருகொடவத்தையில் கொள்கலன் ஒன்றை பரிசோதனையின் போது 17 இலட்சத்து 76 ஆயிரம்  பெறுமதியான போதை பொருட்களுடன் மூவர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  
குறித்த சம்பவத்தில் 232 வெளிநாட்டு  மதுபான போத்தல்கள், 253 வைன் போத்தல்கள் மற்றும் 46 பியர் போத்தல்களுடன் ஒரு தொகை சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹசீஸ் போதை பொருள்  சுமார் 10 இலட்சமாகும், வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுமார் 7 இலட்சத்து 76 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் முழுமையான பெறுமதி 17 இலட்சத்து 76 ஆயிரம் என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக ஒருகொடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.