யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்தல்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் 2 கிலோ 72 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தினை நேற்று மாலை வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே சோதனையிட்ட சமயத்தில் 2 கிலோ கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக, விசாரணைகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Powered by Blogger.