மழை வானம் அழகு..!


வானவில் பூத்த
மழை வானம் அழகு...
வண்ணங்கள் மாறும்
மேகங்கள் அழகு...
சில்லென குளிரடிக்கும்
மழைக்காற்று அழகு.
மழைத்துளிகள் தெளிக்க வரும்
மண் வாசம் அழகு....
மழை அழகு!
மின்னலும் அழகு!
துளிமழையில் நனைந்தாடும்
புள்ளினங்கள் அழகு!
மழைக்காற்றில் உதிர்ந்து விழும்
சருகு இலை அழகு!
தூசி  கழுவி சிரித்தசையும்
பச்சை இலைகள் அழகு!
பறவைகளின் சிணுங்கல் காதில்
இசையாதல் அழகு!
மேகம் தொட்டணைத்து தாளமிடும்
முழங்கு மொழி அழகு!
மழை நீர்க்குமிழி மண் துளைத்து
மலர்த்தும் கோலம் அழகு!
மழை வானம் தொட்டு ரசிக்கும்
வையமும் அழகு!
மழையழகு! வானழகு!
மழைப் பூ மலர்ந்த மண்ணும் அழகு!

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

No comments

Powered by Blogger.