கண்டியில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு பிணை வழங்கப்படமாட்டாது!

கண்டியில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் பிணை வழங்கப்படமாட்டாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கண்டிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,’கண்டி இனக்கலவரத்திற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றிச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையானதாக இருக்க வேண்டும். எனவேதான் இவர்கள் கைது செய்யப்பட்டாலும் பிணை வழங்காது அவர்களுக்கான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வது இலகுவானதாக இருக்கும். பிணை வழங்காமல் கைது செய்யப்பட்டால்தான் இந்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசாங்கத்தினால் முடியும். ஏனெனில் அவர்கள் மீண்டும் தவறுகள் செய்வதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது.

இவ்வாறு நாட்டினது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பாகக் கடுமையான சட்டங்களும் கொண்டுவரப்படவேண்டும் என வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.