நடிகை அமலா பாலுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்!

அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

மே 11ம் திகதி படம் ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர்.

ரிலீஸை தள்ளிப் போட்டதற்கான காரணத்தை யாரும் தெளிவாக கூறவில்லை.

பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனதால் அரவிந்த்சாமி அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அமலா பாலும் கடுப்பாகியுள்ளார்.


பட ரிலீஸை எதற்காக தள்ளி வைத்துள்ளனர் என்றே தெரியவில்லை. படம் விரைவில் ரிலீஸாகும் என்று நம்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார் அமலா பால்.

தன் படம் ரிலீஸாகாத கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது சொந்த மாநிலமான கேரளாவில் நடந்த புரட்சித் திருமணத்தை வாழ்த்த அமலா பால் தவறவில்லை.

மலையாளத்தில் ஹிட்டான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை பார்க்க ரசிகர்கள் மேலும் காத்திருக்க வேண்டியுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வரும் 18ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.