முள்ளிவாய்க்கால் நோக்கி சுடரேந்திய வாகனம் இன்று கிளிநொச்சியில்!


யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் இன்று கிளிநொச்சியிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.

 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்த சுடரேந்திய வாகனம் இன்று மன்னார், வவுனியாவின் பல பகுதிகளுக்கு இன்று பயணிக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் படத்துக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

 இந்த வாகனம் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தைச் சென்றடையும்..


Powered by Blogger.