வடக்கு மருத்­து­வர்­கள் இன்று பணிப்­பு­றக்­க­ணிப்பு!

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை தவிர்ந்து வடக்கு மாகா­ணத்­தில் உள்ள அனைத்து அரச மருத்­து­வ­ம­னை­ க­ளி­லும், அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் இன்று திங்­கட்­கி­ழமை அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ளது. திங்­கட்­கி­ழமை காலை 8 மணி முதல் பணிப் புறக்­க­ணிப்­புப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அரச மருத்­துவ அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய மேல­திக கொடுப்­ப­ன­வு­கள் (புதிய சுற்­ற­றிக்­கை­யின்­படி) கடந்த 4 மாதங்­க­ளாக வழங்­கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகா­ணத்­தில் பணி­பு­ரி­யும் மருத்­து­வர்­க­ளுக்கு மட்­டுமே அவை வழங்­கப்­ப­ட­வில்லை. இதை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தியே இன்று பணிப்­பு­றக்­க­ணிப்பு வடக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.