கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் - கரு ஜயசூர்யவிடம் வாக்குமூலம்!

ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூர்யவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குச் சென்று
இன்று வாக்குமூலம் பெற்றனர்.
ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட போது, கரு ஜயசூர்ய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராகப் பதவி வகித்தார் சம்பவம் தொடர்பில் அவர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்திருந்தார்.
இது தொடர்பாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயாரை கடத்திச் சென்ற குழு, அவர் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.