முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நினைவு நாள் ஒழுங்கு முறை!

முள்ளிவாய்க்காலில் மதியம் சரியாக 12.30 மணிக்கு நிகழ்விடத்திலுள்ள பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும் ஏனய சுடர்களை முள்ளிவாய்க்காலில் வலி சுமந்த உறவுகளோடு இணைந்து பொதுமக்கள் ,மாணவர்கள் ,இளைஞர்கள் மற்றும் அரசியற் பிரமுகர்கள் என ஏனையோர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செய்துள்ளது.அதைத்தொடர்ந்து நிகழ்விடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறவுகளை நினைவு கூரல் இடம்பெறுமென மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவுநாள் நிகழ்வு ஒழுங்குமுறை பற்றி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்விடத்திற்கு தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அன்றையநாள் மக்கள் வருகை தருவார்கள். வருகை தரும் மக்களில் முதியோர், தாய்மார்கள், கைக்குழந்தைகள், மதகுருமார்கள், அவயங்களை இழந்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள் போன்றோருக்கு ஒதுக்கப்பட்ட நினைவிடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரமுள்ள சுற்றுவட்டாரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு கதிரைகள் போடப்பட்டிருக்கும் மற்றும் குடிநீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இளைஞர் கழகங்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போன்றோர் இணைந்து மேற்கொள்வார்கள் காலையிலிருந்து தமிழர் இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான ஒலிபரப்புகள் நிகழ்விடத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.