நாப்போலியில் பிள்ளையார் ஆலய அங்குரார்ப்பணம்!

 ஐரோப்பா தேசமெங்கும் புலம்பெயர் தமிழர்களால் இந்துசமய ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடாத்தப்படுவது எல்லோரும் அறிந்த விடயமே.ஆனாலும் கடந்த பல தசாப்தங்களாக இத்தாலி நாப்போலி மண்ணில் ஓர் இந்து ஆலயம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்தது.இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்துமாமன்றம் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி காரணமாக கடந்த மே மாதம் முதலாம் திகதி நாப்போலியில் பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைக்கப்படுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் சித்திரை புதுவருடக்கொண்டாட்டமும் சிறப்பாக நடந்தேறியது. சுவிற்சர்லாந்து தேசத்திலிருந்து வருகை தந்திருந்த சிவஸ்ரீ.நாகேஸ்வர.கஜேந்திரக் குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தி விக்கிரகங்களின் அமைவிடத்திற்கான அடிக்கல் அடியார்களைக் கொண்டு நாட்டப்பட்டது. 

 இந்துமாமன்றம் நாப்போலி
Powered by Blogger.