பௌத்த சமூகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் மைத்திரி!

பல்வேறு துறைகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முயற்சிக்கும் வேளையில், பௌத்த சமூகத்தை வலுப்படுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

 இலங்கையில் பௌத்த சமூகத்தை போன்றே தமிழ், முஸ்லிம் மக்களும் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பௌத்த சமூகம் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Powered by Blogger.