பிரபல நடிகை சென்ற கார் விபத்து..!

பிரபல கேரளா நடிகியான பார்வதி கார் விபத்தில் சிக்கினர்.மலையாள படத்தின் முன்னணி  நடிகைகளில் ஒருவர் பார்வதி.
இவர் டேக் ஆப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. இதற்கான விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் ஒரு சிலர்க்கு மட்டும் ஜனதிவதி விருது வழங்கினார். அதே சமயத்தில் மற்றவர்களுக்கு மத்திய மந்திரி விருது வழங்குவார் என தெரிவிக்கப் பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகர்கள் விழாவை புறக்கணித்தனர். இதில் நடிகை பார்வதியும்  அடங்குவார். இந்நிலையில், நடிகை பார்வதி சென்ற கார் விபத்தில் சிக்கியது.
நேற்று ஆலப்புழா அருகே கொம்முடி தேசிய நெடுஞ்சாலையில் நடிகை பார்வதி சென்ற கார் மீது இன்னொரு கார் மோதியது
அதிர்ஷ்டவசமாக இதில் பார்வதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஆலப்புழா போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில்  உறைந்து உள்ளனர்.
Powered by Blogger.