யாழில் பிராந்திய ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு! கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

யாழில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் மீது நேற்றைய தினம் 
வாள்வெட்டு  நடத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

 யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் போராட்டமானது நாளை காலை 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புகளுக்கும் ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Powered by Blogger.