இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி!

இம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்
தலைவர் பதவிக்காக இதுவரை நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

அதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

இவர்கள் நால்வருடைய பெயர்களையும் கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் நாளைய தினத்திற்குள் முன்வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.