உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ராஜித சேனாரத்ன!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

சுமார் ஒரு வருட காலத்திற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 வது பொதுக்கூட்டத்தின் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மே மாதம் 22 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஜெனீவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.