இன்று உயிரிழந்த ரக்பி வீரர்கள் தொடர்பான தீர்ப்பு!

ரக்பி போட்டித் தொடரில் கலந்து கொள்வற்காக இந்நாட்டுக்கு வருகை தந்த பிரித்தானிய வீரர்கள் இருவர் மூச்சுத்திணரல் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக அவர்களின் உடற்பாகங்கள் அரச ஆய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

 அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் சென்றிருந்த இரவு கூடலகத்தின் சிசிடிவி காட்சிகள் விசாரணைக்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் , உயிரிழந்த வீரர்களின் சடலங்கள் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படுவது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.
Powered by Blogger.