சீனித் தொழிற்சாலையில் கரும்பு அரைக்கும் நிகழ்வு!

செவனகல சீனித் தொழிற்சாலையில் இவ்வருடத்திற்கான கரும்பு அரைக்கும் நிகழ்வு இன்று காலை அதன் தலைவர் நவீன் அதிகாரம் தலைமையில் ஆரம்பமானது.இம்முறை 3,517 ஹெக்டயர் நிலப்பரப்பில் கரும்பு அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
கரும்பு அரைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து செவனகல பிரதேசத்தில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்களின் வருமானம் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டர்h.
டிரக்டர் உரிமையாளர்களுக்கும் ஏனைய 4 ஆயிரம் பணியாளர்கள் இதன் மூலம் நன்மையடைவார்கள் என்று செவனகல சீனித் தொழிற்சாலை தலைவர் நவீன் அதிகாரம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.