இலங்கையில் இடம்பெறும் தமிழினஅழிப்பும்- தமிழர்களின் நிலை என்ன??

வடக்கு - கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச் சின்னங்கள் அமைக்கும் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறு ஒக்லாண்ட் இன்ஸ்சிரியூட் நிறுவனத்தின் நிறுவுனரும் காணி மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அநுராதா மிட்டால் தெரிவித்தார.

தமிழ்த் தேசியமும் இலங்கையில் இடம்பெறும் தமிழினஅழிப்பும் என்ற தொனிப் பொருளிலான இரண்டாவது சர்வதேச மாநாடு கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசின் மட்டுப்படுத்தப்பட்ட மீள்குடியமர்வு நடவடிக்கை மோசமான தரத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் - நீதிக் கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும் என்னும் கருப் பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு நேற்று ஆரம்பமாகி மூன்று நாள்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.