வடக்கில் பட்டதாரிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம்!

வடமாகாண வேலை கோரும் பட்டதாரிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண வேலை கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பட்டதாரிகள் போராட்டம்மீது பொலிஸார் நடத்திய நீர்த்தாரை தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும்,  எது வித அரசியல் தலையீடுகள் இன்றி சகல பட்டதாரிகளையும் அரச சேவையில் இணைக்குமாறு வலியுறுத்தியும் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதே வேளை வவுனியா மாவட்டச் செயலகம் முன்பாகவும் இன்று காலை ஒன்று கூடிய பட்டதாரிகள் எதிர்ப்பப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டின் 14 மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக அரசின் நியமனத்தில் கால இழுத்தடிப்பு மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் என்பவற்றைக் கண்டித்து சம நேரத்தில் போராட்டம் முன்னனெடுக்கப்பட்டது.
இப் போராட்டங்கள் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

Powered by Blogger.