ஜப்பானில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!

ஜப்பானின் மேற்கு பகுதியான ஒசாகா கியோடோவில் இன்று (திங்கட்கிழமை) 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியிலுள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை அறியக்கிடைக்கவில்லை எனவும் ஜப்பான் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Powered by Blogger.