வாகண விபத்தால் பாடசாலை7மாணவர்கள் வைத்தியசாலையில்!

ஹெம்மாதகம, நகரகிரி மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் சிலர் பயணித்த ட்ரக் வண்டி புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயர்தரத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்கும் 10 பேர் இந்த ட்ரக் வண்டியில் ஏரி அலுதெனிய பிரதேசத்திற்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தின் என்ஜின் உடைந்தமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த 7 மாணவர்களும் ஹெம்மாதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மாவனல்ல வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.