மயிரிழையில் உயிர் தப்பிய சிம்பாப்வே அதிபர்!

தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது சிம்பாப்வே அதிபர் Emmerson Mnangagwa மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

.

சிம்பாப்வே நாட்டில் ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அதிபர் Emmerson Mnangagwa உரையாற்றினார்.

அவரது உரையைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அதிபர் உரையை முடித்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிய போது, அவரை நோக்கி வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

இதன் போது, அவரின் பாதுகாவலர்கள் அவரை ஒரு பக்கமாக இழுத்துக் காப்பாற்றியதாகவும் இதன்போது சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வௌியாகியுள்ளது. 
Powered by Blogger.