விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு கூட்டமைப்பும் காரணம்-செ.கஜேந்திரன்!

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவதற்கு கூட்டமைப்பும் முக்கிய காரணம்
என, தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு கூறினார்.

அண்மையில் யாழில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சம்பந்தர், விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானது என்றும், அவர்களின் போரடட்டத்தை சர்வதேசம் ஒடுக்கிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கை சிறைகளில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் தாம் என்ன குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் என்பதை கூட அறியாது சிறையில் வாடுகின்றனர்.

இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நல்லாட்சி அரசாங்கத்திடம் இதுவரை வலியுறுத்தியதாக தெரியவில்லை.

தமது தாயை இழந்த நிலையில், அநாதரவாக நிற்கும் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நிலையை பார்த்தேனும் கூட்டமைப்பு மனமிறங்கியதாக இல்லை” என்றும் குறிப்பிட்டார். 
Powered by Blogger.