மட்டக்களப்பில் கோவில்குளத்தில் நடைபெற்ற புரட்சி!

கூத்தில் பெண்களின் பங்கு பெற்றல் வெளிச்சத்திற்குவருவதில்லை. இன்று(13.05.18) கோவில்குளத்தில் நடைபெற்ற சுபத்திரை கல்யாணம் வடமோடிக்கூத்தில் கொப்பி ஆசிரியராக திருமதி சோ. பொன்னம்மா

அவர்களும், சல்லாரி இசைப்பவராக திருமதி மோ. சுமதி அவர்களும் களரியில் இயங்கிய தருணம் பொன் எழுத்துக்களால் எழுதவேண்டும்..

மூத்த பல்துறைக் கலைஞர் கோயிற்குளம் பொன்னம்மா அவர்களும் பாரம்பரிய கலைஞர் சுமதி அவர்களும் எமது தனித்துவ கலை கூத்தினை பெண்களின் பங்களிப்புடனான புதியதொரு பரிணாமத்தை நோக்கி கொண்டு சென்ற பாங்கு மண்முனைபற்று கலாசார அதிகார சபையினால் கோயிற்குளத்தில் நடைபெற்ற பௌர்ணமி கலை விழா கூத்து நிகழுவில் தத்ரூபமாக புலனாகியது கொப்பி அண்ணாவியாராக திருமதி பொன்னம்மா அவர்களும் சல்லாரி அண்ணாவியாராக திருமதி சுமதி அவர்களும் கூத்துக்களரியை அதிரச்செய்தனர் கூத்துக்கலையின் மீதான ஆர்வத்தை புதிய தலைமுறைக்கு கனதியான முறையில் ஊட்டியுள்ளனர் கூத்துபார்க்கும் பார்வையாளர்களின் ரசனையை அதிகரித்துமுள்ளனர்.
Powered by Blogger.