பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி!

பெல்மடுல்ல பிரதேசத்தில் பஸ்ஸில் சென்ற பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இரத்தினபுரி - பதுளை வீதியில், பெல்மதுளை, சன்னஸ்கம கிரிவெல்தெனிய சந்தியில் இன்று பிற்பகல் நடந்துள்ளது.


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனின் கையே இவ்வாறு துண்டாகியுள்ளது.

குறித்த மாணவன் தனது கையை பஸ் ஜன்னலுக்கு வெளியில் வைத்தவாறு வந்துள்ளார்.

இதன்போது பாரவூர்தி ஒன்று கை பகுதியை மோதுண்டதால் மாணவனின் கை வேறாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவன் கையுடன் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.Powered by Blogger.