தென்பகுதி மீனவா்கள் வெளியேறாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!

வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும். இல்லையேல் மருதங்கேணி பிரதேச

செயலகம் தொடர்ந்து யாழ்.மாவட்ட செயலகம் ஆகியவற்றை முற்று கையிட்டு போராட்டம் நடத்தப்படும். என எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு –மருதங்கேணியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் அடாத்தாக தங்கியிருக்கும் நிலையில், அந்த மீனவர்களை வெளியேறுமாறு கோரிக தமிழ் மீனவர்களுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

இது குறித்து கேட்டபோதே மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், அடாத்தாக வாடிகளை அமைத்துக் கொண்டு தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுங்கள்

என மக்கள் பல தடவை கேட்டபோதும் பொறுப்புவாய்ந்தவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தென்பகுதி மீனவர்களை வெளியேற்றவேண்டும் என கேட்ட தமிழ் மீனவர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்றார்கள்.

நேற்று வடமாகாணசபையில் உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு-சாலையில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழையும்போது தட்டிக்கேட்டிருந் தால் இன்று வடமராட்சி கிழக்கில் வந்திருக்காது.

கொக்கிளாயில் வந்த பௌத்த விகாரை  நல்லூருக்கும் வரும் என  கூறியிருக்கின்றார்.   அவருடைய கருத்து நியாயமானது. இன்று மருதங்கேணியில் வந்திருக்கும் தென்பகுதி மீனவர்களை கலைக்காவிட்டால் நாளை அவர்கள் குருநகருக்கும்,

பாசையூருக்கும் வருவார்கள். எனவே இது வடமராட்சி கிழக்கு மீனவர்களின் பிரச்சினையாக எவரும் பார்க்ககூடாது. இது ஒட்டுமொத்த தமிழ் மீனவர்களுடைய பிரச்சினை. ஆகவே இந் த விடயத்தில் சகல தரப்பினரும் ஒன்றுபடவேண்டும்.

ஓரிரு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மருதங்கேணி பிரதேச செயலகத்தை மூடுவோம். தொடர்ந்து யாழ்.மாவட்ட செயலகத்தையும் மூடி போராடுவோம். அவ்வாறான நிர்ப்பந்தத்திற்குள் எம்மை அரசு தள்ளகூடாது என்றார். 

No comments

Powered by Blogger.