சைட்டம் மாணவர்கள் கொத்தலாவெல பல்கலைக்கு அங்கீகாரம்!

சைட்டம் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ பீட மாணவர்களை சேர். ஜோன் கொத்தலாவெல பல்கலைக்கழகத்தில்
இணைத்துக் கொள்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி, சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது.

சைட்டம் வைத்திய கல்லூரியில் கல்வி கற்ற 982 மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விசேட சட்டமூலமானது, திருத்தங்களுடன் நாடாளுமன்றில் கடந்த 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டு சபாநாயகரும் அதனை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.