விக்னேஸ்வரன் மீது து.ரவிகரனுக்கு ஆதரவாக சயந்தன் பாய்ச்சல்!

வடக்கு மாகாணத்தில் அபகரிக்கப்படும் நிலங்களைப் பாதுகாக்க வெறுமனே எழுதி வாசிப்பவர்களாக அல்லது குந்தி இருந்து
அரசியல் பேசுகின்றவர்களாக இல்லாமல் தீர்வை முன்மொழிபவர்களாக இருக்க வேண்டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந்­தன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் 125ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ர­னின் நில ஆக்­கி­ர­மிப்­புப் பிரே­ரணை மீது கருத்­துக்­களை முன்­வைக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாங்­கள் இந்­தப் பிரச்­சினை தீர்ந்து விடக்­கூ­டாது என்று விரும்­பு­கி­றோமா அல்­லது பேசிப் பேசியே அர­சி­யல் செய்ய விரும்­பு­ கி­றோமா என்­பதை இந்­தச் சபை முத­லில் தீர்­மா­னிக்­கட்­டும்.

பன்­னாட்டு நீதி என்­பது உடன் பரி­கா­ரம் கிடைக்கும் நீதி­யல்ல. அது தாம­த­மா­கத்­தான் கிடைக்­கும். அந்த நீதியை நாடுங்­கள் இல்­லை­யெ­னில் அது உட­ன­டி­யாகப் பலன்­க­ளைத் தராது.

நிலை­மா­று­கால நீதி­யா­னது நிலை­மாறி இன்­னொரு நிலைக்கு வரட்­டும். நிலப் பிரச்சினை தொடர்பில் தற்­போ­துள்ள பிரச்­சினை, எங்­க­ளுக்கு ஒரு சுற்­றுச்­சூ­ழல் திணைக்­க­ளமோ அமைச்சோ விடை­கா­ணாது என்பதுதான். நாங்­கள் காடு­க­ளைப்­பற்றி கரி­ச­னை­யு­டை­ய­வர்­கள்.

நாட்­டில் 35 வீதமான நிலத்தை காடு­க­ளா­கப் பேணு­வ­தாக அரசு பன்­னாட்­டுக்கு உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

அப்­ப­டி­யெனில் இந்த 35 சத­வீ­த­மான காடு­கள் எந்த மாகா­ணத்­துக்­குள் எத்தனை சத­வீ­தத்­துக்­குள் அமைய வேண்­டும் என்­ப­தா­கத்­தான் அது இருக்­க­வேண்­டும்.

காடு­கள் எல்லா இட­ங்களிலும் இல்லை. இலங்­கை­யில் இருக்கும் காடு­கள் என்ன வகைக் கு­ரி­யவை?எங்­க­ளுக்­குள்ள ஆய்­வுக்­கான ஒதுக்­கீட்­டுப் பணத்­தைப் பயன்­ப­டுத்தி இப்­ப­டி­யான ஆய்­வு­க­ளைச் செய்­ய­வேண்­டும் என்­றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.