யாழில் இருந்து வந்த நபர் வவுனியா பொலிஸாரால் கைது

வவுனியாவில் 2 கிலோ 34 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பொலிஸ் போதைப் தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தை வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் வழிமறித்த வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் 2 கிலோ 34 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் அதனை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய மோகன்தாஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்ற நிலையில், குறித்த நபரை நாளைய தினம் நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.