சகல குடியேற்றவாசிகளுக்கும் காணி உறுதி கிடைக்குமா??

இந்த வருடத்தின் இறுதிக்குள் சகல மகாவலி வலய விவசாய மக்களுக்கும் அவர்கள் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் காணிகளின் சட்டபூர்வமான உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.


அரலகங்வில மகுல்தமன மகா வித்தியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற மகாவலி பி,சீ மற்றும் ரம்புக்கன் ஓய வலயங்களைச் சேர்ந்த 12 083 குடியேற்றவாசிகளுக்கு ‘ரன்தியவர’ காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

நாட்டை வளப்படுத்த பாடுபடும் மகாவலி விவசாய மக்களுக்கு அவர்கள் நீண்டகாலமாக வசித்துவரும் காணிகளின் சட்டபூர்வ உரிமையை வழங்கும் ‘மகாவலி குடியேற்றவாசிகளுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய செயற்திட்டம்’ 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த குறிக்கோளினை நிறைவேற்றும் வகையில் மகாவலி வலயங்களில் ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்பட்டு வருவதுடன், 2018 ஆம் ஆண்டில் அனுமதிப்பத்திரங்கள்இ கொடுப்பனவு பத்திரங்கள் மற்றும் நீண்டகால குத்தகை அடிப்படையில் என 40,000 காணி உறுதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் தரவுகளுக்கமையஇ கடந்த 2017 ஆம் ஆண்டில் மகாவலி பி சீ எச் வலயங்களிலும் மொரகாஹகந்த, விக்டோரியா ஹுருளுவாவி மற்றும் வளவ வலயங்களைச் சார்ந்த குடியேற்றவாசிகளுக்கும் இச்செயற்திட்டத்தின் கீழ் உறுதிகளும் அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டிருப்பதுடன்இ சட்டபூர்வ காணி உரிமையற்ற பாடசாலைகள் மருத்துவமனைகள்இ பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட 12 573 அரச நிறுவனங்களுக்கும் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் மகாவலி பி வலயத்தை சேர்ந்த மக்களுக்கு 6இ104 உறுதிகளும் சீ வலய மக்களுக்கு 4,312 உறுதிகள் மற்றும் ரம்புகன் ஓய வலய மக்களுக்கு 1595 காணி உறுதிகளும் 22 விகாரைகளுக்கான உறுதிகள் மற்றும் 50 அரச நிறுவனங்களுக்கான உறுதிகள் உள்ளிட்ட 12,083 காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டம் மின்சாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில்கள் துறைகளின் ஊடாக வியாபித்து காணப்படும் விரிவானதொரு அபிவிருத்தி செயற்திட்டமாகும் எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.