இலங்கயில் அடைக்கப்பட்ட டின் மீன்கள் விறபனையில்எச்சரிக்கை!

எதிர்வரும் பொசன் காலப்பகுதியின் போது, தானசாலைகளுக்காக கொள்வனவு செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கை பொது மக்கள் சுகாதார பரிசோதர்கள் சங்கம், தானசாலைகள் ஏற்பாட்டாளர்களிடம் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது, பாவனைக்கு உதவாத பல டின் மீன்கள் மீட்கப்பட்டிருந்தன.

அவ்வாறான டின் மீன்கள் இன்னும் சந்தைகளில் இருக்க கூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.