கிளிநொச்சி நபர் கொழும்பிற்கு சென்று வந்த பத்து நாட்களில் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில், தருமபுரம் - உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் நேற்று மாலை டெங்குக் காய்ச்சலால் பலியாகியுள்ளார்.


கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று காலை ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசத்திலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன் பின்னரே நேற்று காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்த குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இறந்தவர் எலிக்காச்சலினாலும் இறந்திருக்கக்கூடிய சந்தேகங்கள் இருப்பதனால் அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசிய தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரை 126 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமானது 03ஆம் இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Powered by Blogger.