லசந்த படுகொலை- பொலிஸ் அதிகாரி இரகசிய வாக்குமூலம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி, நேற்று நீதிமன்றத்தில் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கினார்.

 கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்த உதவி ஆய்வாளர் திஸ்ஸ சிறி சுகதபால, நேற்று மாலை கல்கிஸை நீதிமன்ற பிரதம நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில், இரகசிய வாக்குமூலம் அளித்தார்.

 லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் இரண்டாவது சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட இவர், நீதவான் முன்னிலையில் மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.

 திஸ்ஸ சிறி சுகதபால கடந்த பெப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.