வடமராட்சியில் பெண்களை குறிவைக்கும் மர்ம நபர்கள்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம், மற்றொரு மோட்டார் சைக்கியில் வந்த அடையாளம்
தெரியாத நபர்கள், தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“குறித்த தம்பதியினர், சந்தைக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தம்பதியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் வடமராட்சியில் அதிகரித்துள்ளன. அண்மையில் இத்தகையதொரு சங்கிலி அறுப்புச் சம்பவத்தின் போது, பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.