மாநகர எல்லைக்குள் மீறி மீண்டும் இராணுவத்தினரின் செயற்பாடுகள்!

தேசிய மரநடுகை நாளை முன்னிட்டு, யாழ்.மாநகர சபை அதிகார
எல்லைக்குள், ஆளுநரின் திட்டமிடலில் மரம் நாட்டுவதற்கான ஆரம்ப பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. இது தொடர்பாக
28.05.2018 அன்றைய யாழ்.மாநகர சபை விசேட அமர்வின் போது யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இராணுவம் சிவில் செயற்பாட்டில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று உறுப்பினர் வி.மணிவண்ணன் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் சபையில் ஏகமானதான நிறைவேற்றப்பட்டது.இருந்த போதும் இன்று காலை முதல் யாழ்.கோட்டைக் பகுதிக்குள் இராணுவத்தினர் இச் செயற்பாட்டினை மீள ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
மேலும் எமது மாநகரத்தின் அழகுபடுத்தல் செயற்பாட்டினை எமது மாநகர பணியாளர்களை புறம் தள்ளி கௌரவ சபையின் ஏகமனதான தீர்மானத்தையும் புறந்தள்ளி மீண்டும் இச் செயற்பாட்டுக்கு இராணுவத்தினரை பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.

ஒரு கௌரவ சபையின் 44 உறுப்பினர்களினால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தை மதிக்காமல் நடைபெறுகின்ற இச் செயற்பாடு யாழ்.மநகர சபை தீர்மானங்களை இயற்றுகின்றதும் அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு இடமே ஒழிய அத் தீர்மானங்களை செயற்படுத்த வேண்டிய தேவையில்லை என்ற எண்ணகருவவைச் உருவாக்குகின்றது. அக அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த ஒரு தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக இச் செயற்பாடு நடைபெறுகின்றது என்றால் இச் சபையின் ஒர் உறுப்பினராக தொடர்ந்தும் நான் பதவி வகிப்பதில் அர்த்தம் உள்ளதா என்ற வினாவும் என்னில் எழுகின்றது.
எமது மக்கள் வீதிகளில் இன்றும் தமது பூர்விகமான நிலங்களை விடுவிக்ககோரி இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். இராணுவத்தினரால் காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுளை வேண்டி போராடுகின்றார்கள். இதற்கு மேல் இராணுவ மயமாக்கலை நிறுத்தவேண்டும் அதற்கு இராணுவம் இம் மண்ணை விட்டு விலவேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்படிட்டிருக்கும் நேரத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ மயமாக்கலை ஊக்கிவிக்கும் செயலாகவே அமையும்.
கௌரவ ஆளுநர் அவர்கள் பல முறை யாழ்ப்பாண மக்களின் உடல்களில் இராணுவனத்தினரின் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்றும், யாழ் மாவட்ட இராணுவ தளபதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின ஊர்வலங்களைக் காட்டிலும் எமது வெசாக் பண்டிகைக்கே மக்கள் அதிகளவில் வந்தார்கள் என்ற கருத்துகைளை தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று 'மரத்திற்கான குழிதானே வெட்டிவிட்டு போகட்டும்', 'மரம் தானே நாட்டிவிட்டு போகட்டும்' என்று நாம் சாதாரணமாக இருந்து விடலாம். ஆனால் இது எமது மண்ணில் இராணுவ மயமாக்கலை நாங்களாகவே ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும். இராணுவ மயமாக்கல் பல வடிவங்களிவ் நடைபெறும் அதில் இவையும் ஒன்று தான்
இதன் மூலம் இவர்கள் யாழ்.மண்ணில் இராணுவம் தேவை அது மக்களுக்கு நன்மை அளிக்கின்றது அதனை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர். அச் செயற்பாட்டுக்கு கௌரவ சபையின் தீர்மானத்தையும் மீறி யாழ்.மாநகர சபையும் துணைபோனது மிகவும் கண்டனத்திற்குரியது.

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகரசபை உறுப்பினர்
Powered by Blogger.