ஞான­சா­ர­ருக்குப் பிறந்­தது ஞானம்!

விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு அப்­போதே புரிந்த விட­யம், இப்­போது தான் எமக்­குப் புரிந்­தி­ருக்­கி­றது. தலைமை
அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­கவை, ‘தந்­திர நரி’ என்று தமி­ழீழ விடு­த­லைப் புலி­ க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் குறிப்­பிட்­டது முற்­றி­லும் உண்­மையே.

இவ்­வாறு பொது­ ப­ல­சே­னா­வின் பொதுச் செய­ லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.  அவர் தெரி­வித்­த­தா­வது:-

பிர­பா­க­ர­னுக்கு அப்­போதே புரிந்த விட­யம் தற்­போது தான் எமக்கு புரிந்­துள்­ளது.

அர­சி­ய­லில் இடம்­பெ­றும் ஒவ்­வொரு விட­யங்­க­ளை­யும் தலைமை அமைச்­சர் தமக்­குச் சாத­க­மாக மிகத் தந்­தி­ர­மான முறை­யில் எவ­ருக்­கும் தெரி­யாத வகை­யில் பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­றார்.

நாட்டு மக்­க­ளுக்கு அர­சி­யல்­தீர்வு பெற்­றுத் தரு­வ­தாக கூறி அவரே, இனங்­க­ளுக்­கி­டை­யில் மறை­மு­க­மாக வன்­மு­றையை தோற்­று­விக்­கின்­றார்.

இனி­வ­ரும் காலங்­க­ளில் எந்த அர­சி­யல் தரப்­பி­ன­ருக்­கும் ஆத­ரவு வழங்க போவது கிடை­யாது. நாட்டு மக்­கள் மகிந்­த­வை­யும் நம்ப வேண்­டாம் மைத்­தி­ரி­யை­யும் நம்ப வேண்­டாம்.

சிறந்த அர­சி­யல் தலை­வ­ரைச் சிங்­கள பௌத்த மக்­கள் ஒன்­றி­ணைந்து தெரிவு செய்ய வேண்­டும்.

நாட்­டின் அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­யும் போது தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளின் வாக்­கு­கள் முக்­கி­ய­மாக உள்­ளன.

ஆனால் இரண்டு பிரி­வி­ன­ரின் கோரிக்­கை­க­ளை­யும், கடந்த அர­சும், தற்­போ­தைய அர­சும் நிறை­வேற்­ற­வில்லை. சிங்­கள பௌத்த பெரும்­பான்மை மக்­கள் கடந்த காலங்­க­ளில் அர­சி­யல் ரீதி­யில் விட்ட தவ­று­களை இனி­மே­லும் தொடர வேண்­டாம்.

அதே­வேளை, சிறைச்­சா­லை­யில் தனக்கு காற்­சட்­டையை அணி­விக்க முயற்­சிக்­கப்­பட்ட போதும், நான் அதனை அணி­ய­வில்லை. சிறை­யில் இருந்த ஐந்து நாள்­க­ளும் தான், காவி உடையை கழற்றி வைத்து விட்டு, சார­மும் சட்­டை­யும் அணிந்­தி­ருந்­தேன் – என்­றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.