சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்!

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட குற்றப் புலனாய்வு
திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தனக்கு கொலை அச்சுறுத்தல்களுக்கும், சமூக வலைத்தளங்களின் ஊடாக துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படுவதாக தெரிவித்தே அவர் முறைபாடு பதிவு செய்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்தே தான் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஞானசாரர் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.