இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டம் - நூல் மற்றும் ஆவணப்பட வெளியீடு!

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வருட கால நிறைவினையொட்டி  இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டம் உதயம் அதிகாரமையத்திற்கு திருகுவலியா? என்ற நூல் மற்றும் ஆவணப்படமொன்றும் நேற்றுமுன்தினம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சமூக சிப்பிகள் நிறுவனத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது, இலங்கை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் சாதக பாதக நிலைப்பாடுகள் பற்றியும் இந்தியளவில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வெற்றிப்பாதை குறித்தும், இந்தியாவின் தகவலறியும் இயக்கமான மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் நிகில் தே கருத்து தெரிவித்திருந்தார்.
 இதன்போது அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது

தகவலறியும் உரிமைச் சட்டமானது நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்கும் அதியுன்னத சட்டமாகும். இதன் மூலம் பொதுப் பணியில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பொறுப்புக் கூறல் உறுதிப்படுத்தப்படுகின்றது.

 உலகில் நடுத்தர வர்க்கத்தின் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். ஆனால் ஊழல்களினால் குறித்த தரப்பினரே அதிகம் பாதிக்கின்றனர். எனவே இச்சட்டமானது இவர்களுக்கு சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். வழக்கறிஞர் ஒருவரின் உதவியின்றி நேரடியாக அதிகார வர்க்கத்துடன் தொடர்பு கொள்ள இச்சட்டமூலம் உதவும்.

அதேபோல், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நாமும் இணைந்தே பணியாற்ற வேண்டியுள்ளது. அவையும் எமக்கு ஒரு சாதகமான செயல். ஊடகவியலாளர்களும் இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். இல்லையேல் சிறந்த இச்சட்டத்தின் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்.

குறித்த சட்டத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பொதுப் பணிகளில் ஈடுபடும் மற்றும் பொது மக்களின் பணம் பயன்படும் அனைத்து இடங்களிலும் காணப்படும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கு இச்சட்டம் வழிகோலும்.

>குறித்த சட்டத்தை பயன்படுத்தும் போது காணப்படும் சவால்களை கண்டு துவண்டுவிடாமல் இதன்மூலம் எதிர்காலத்தில் வெளிப்படும் பாரிய நலனை நோக்கியே நாம் பணியாற்ற வேண்டும்.

மிகவும் அவதானமாக செயற்பட்டு இச்சட்டத்தை பாதுகாப்பதோடு, நாட்டின் அனைத்து மக்களுக்கும் இச்சட்டத்தின் மூலம் முழுமையான பலனை பெற்றுக்கொள்ள உதவ வேண்டும் என்றார்.

குறித்த நிகழ்வில் இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பொது மக்களும், தகவலறியும் ஆணைக்குழுவும் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.