கொத்தலாவல பல்கலைக்கு மாணவர்கள் இணைத்த பின்பு சைட்டம் ரத்து!

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கிய பிறகு சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதாகவும் அதற்காகவே விசேட சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதாகவும் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விஷேட சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.  

No comments

Powered by Blogger.