பெண்ணுக்கு பறிபோன வாழ்க்கை!! காதலன் தலைமறைவு!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு காதலன் தலைமறைவாகியுள்ளார்.


அலைபேசி மூலம் ஒரு வாரமாக காதலித்து வந்த கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண், நபர் ஒருவரை அலைபேசி மூலம் ஒருவார காலமாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கொழும்பிலிருந்து திருகோணமலையை சுற்றிப்பார்க்க காரில் சென்றுள்ளனர்.

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இரவு வேளையில் இருவரும் மது அருந்தி விட்டு அங்கு தங்கியுள்ளனர்.

பின்னர் மறுநாள் காலை எழும்பி பார்த்த போது காதலரை காணவில்லை. தன்னிடம் இருந்த 16 இலட்சம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு அவர் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் அழைத்து வந்தவரின் அலைபேசி மாத்திரமே இருந்ததாகவும் அவர் பற்றிய விபரங்கள் அதில் இல்லை எனவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் உப்புவெளி பொலிஸார் அந்த முறைப்பாட்டை அடுத்து ஹோட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவகின்றனர்.

No comments

Powered by Blogger.