கிளிநொச்சியில் ஜனாதிபதி தலைமையில் பாவமண்ணிப்பு?

ஜனாதிபதி தலைமையில் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டம்  கிளிநொச்சியில்

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று (18) காலை இடம்பெற்றது.
கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் இறங்கி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்துக்கு வந்த ஜனாதிபதியை சிறுவர்கள் வெத்திலை கொடுத்தும் தமிழர் பண்பாட்டை எடுத்தோம்பும் வகையில் இன்னியத்துடன் அழைத்துவரப்பட்டு சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டம் மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத தலைவர்கள், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், முப்படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Powered by Blogger.