அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் போராட்டம் முடிவு!

அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

16 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6/2006 எனும் சுற்று நிருபம் தொடர்பாக அஞ்சல் திணைக்கள ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதேவேளை குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பொதிகள் தேக்கமடைந்துள்ளதுடன், ஆள்அடையாளத் திணைக்களத்தில் முத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.