காலாவை தடை செய்ய நீங்கள் யார்?

நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்ப்பதா? இல்லையா? என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தடை செய்வதற்கு நீங்கள் யார்? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 7 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது காலா திரைப்படம். ரஜினி நடிப்பில் வெளியாகும் இந்த படத்தை, கர்நாடகாவில் திரையிட, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் கூறுகையில், கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி காலா படத்துக்கு தடை செய்துள்ளதாகவும், இப்படத்தால் காவிரி பிரச்சனையை குறித்து விவகாரம் எழும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், #justasking என்ற ஆஸ் டாக்கை பயன்படுத்தி பல்வேறு பபிரச்சனைகளுக்க கேள்வியும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், காலா பட தடை குறித்து டுவிட்டர் பக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனிநபராக கருத்து சொல்லும்போது நாம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், திரைப்படத்தை தடைசெய்யப்படுவது குறித்து தான் மிகவும் வருந்துகிறேன். காலா திரைப்படம் ரஜினி மட்டும் தொடர்புடையது இல்லை.

இப்படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் முதல் விநியோகஸ்தர் வரை அனைவரும் திரைப்படத்தை தடை செய்வதால் பாதிக்கப்படுகின்றனர். பிரச்னைக்கு இது தான் தீர்வா? அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்து திரைப்படத்தை மக்கள் பார்க்காமல் இருக்கலாம். அப்படிச் செய்தால் தான் மக்கள் எதிர்க்கிறார்களா எனத் தெரியும்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை கூட சிலரே தீர்மானிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. சில விளிம்புநிலை அமைப்புகள் என்னை கன்னட எதிரி என கூறலாம். அதற்காக என் கருத்தைக் சொல்லக்கூடாது என்பது கிடையாது. தவறு என்றால் அதை வெளிப்படையாக கூறவேண்டும். நாட்டின் குடிமகன் என்கிற முறையில் எனக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும். ரஜினி படத்தை பார்ப்பதா இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். தடை செய்வதற்கு நீங்கள் யார்? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.